தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் கொவிட் தொற்றிலிருந்து குணமடையும் வரை ஜனாதிபதிக்கான அனைத்து பொறுப்புகளையும், துணை ஜனாதிபதியான டேவிட் மபுஜா கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க ஜனாதிபதி அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவருடன் பயணித்த அனைவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.