follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் இந்தியாவிற்கு

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் இந்தியாவிற்கு

Published on

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.

ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.

அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

May be an image of 1 person, standing and text that says "INDIA"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...