வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் மார்க்கத்தின் சமிஞ்ஞை கட்டமைப்பு நடவடிக்கைகள் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை என்பதனால் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் மார்க்கத்தின் சேவையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.