ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
“எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியுடன் புதிய சின்னத்தில் போட்டியிடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.