follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP1இந்திய வெளிவிவகார அமைச்சர் - பிரதமர் ஹரினி சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

Published on

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

நமது நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் உறுதியளித்தார். “முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் கூறினார்.

பல ஆண்டுகளாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, விரைவான பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ச்சியான இந்தியாவின் ஆதரவின் அவசியத்தையும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஒரு நிலைமாற்றக் காலத்தை கடந்து வருவதாகவும் விளக்கிய பிரதமர் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் குறித்து வலியுறுத்திய பிற்பாடு கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பரந்த அனுபவத்திலிருந்து இலங்கை பயனடையலாம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

விரயம், ஊழல் மற்றும் பரிவர்த்தனைகளில் முறைகேடுகளைக் குறைப்பதற்கும், உற்பத்தியாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் விவசாய சமூகத்திற்கு மகத்தான அனுகூலங்களைக் கொண்டு வருவதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் முக்கியமானது என்பதை இந்திய அமைச்சரும் பிரதமர் ஹரினியும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதி சக்தி (Gati Shakthi) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கை அரச ஊழியர்களுக்கு அபிவிருத்தித் திட்ட நடைமுறைப்படுத்தலை விரைவாகக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

சுங்கம், இறை வரி, தபால் திணைக்களம் உள்ளிட்ட பல துறைகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கோசல ஜயவீர மறைவு : வெற்றிடமாக உள்ள எம்.பி. பதவி குறித்து அறிவிப்பு

கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு...

நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனின் மறைவு குறித்து ஜனாதிபதியிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு

அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார...