உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இந்நாட்டுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
புதிய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுவதாக தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.