எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார்.
20 வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
ஹோமாகம தொகுதி மக்கள் பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருப்பதாக அவர் கூறுகிறார். அதற்காக அந்த நகரத்தை அறிவு மையமாக மாற்றுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும் அதில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் மேலும் ஒரு டாக்டர் பட்டம் படிக்க இருப்பதாகவும், மேலும் சினிமா தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.