மஹவெல மடவல உல்பத்த பிரதேசத்தில் மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 16 வயது மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், சகோதரியின் கணவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க கோரி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் எம். யுகேஸ் என்ற 17 வயது பாடசாலை மாணவன், சிறுவர் தினமன்று உயிரிழந்தான்.
இவர் தனது நண்பரின் காதலி என கூறப்படும் 16 வயது மாணவியை சந்திப்பதற்காக மேலும் இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
தன்னைச் சந்திக்குமாறு குறித்த மாணவனுக்கு குறித்த மாணவி தெரிவித்திருந்த நிலையிலேயே அம்மாணவன் அங்கு சென்றுள்ளான்.
அன்று மதியம் அந்த வீட்டுக்குச் சென்றதும் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்த, காதலியின் சகோதரி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.
வாக்குவாதம் முற்றி கர்ப்பிணி சகோதரி தரையில் வீழ்ந்ததாகவும் அவரது கணவர் மாணவர்கள் மூவரையும் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தடியடி மற்றும் ஹெல்மெட் மூலம் அவர்களை தாக்கியதில் யுகேஷ் என்ற மாணவன் தரையில் விழுந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.