follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP225,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை

Published on

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்கிரமசிங்க இன்று (03) தெரிவித்தார்.

இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடாத்திய பின்னர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

விவசாயம், காணி, நீர்ப்பாசனம், கால்நடை, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க, தெரிவிக்கையில்,

உரங்களை கொள்வனவு செய்யும் போது QR குறியீட்டு முறையை தயார் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் எனவும் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பெரும்போகத்தில் பயிரிடப்படும் 8 லட்சம் ஹெக்டேர்களுக்கு உரம் வழங்க அரசுக்கு 20 பில்லியன் ரூபாய் செலவாகிறது. விவசாயிகளின் தனிப்பட்ட கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...