follow the truth

follow the truth

October, 3, 2024
HomeTOP1நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும்

நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும்

Published on

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை 58 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 8ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தஹம் மற்றும் ராஜிகா தாயக மக்கள் கட்சியில் இணைவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில்...

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500...