follow the truth

follow the truth

October, 3, 2024
HomeTOP2"தவறான முடிவுகளால் ஐக்கிய மக்கள் சக்தி தோற்றது உண்மை"

“தவறான முடிவுகளால் ஐக்கிய மக்கள் சக்தி தோற்றது உண்மை”

Published on

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதன் தோல்விக்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த சில தவறான தீர்மானங்களே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினை விட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பு பலம் வாய்ந்தது எனத் தெரிவித்திருந்தார்.

“.. இப்போதுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு 50% வாக்குகள் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டிருந்தால் இன்று அநுர குமார திசாநாயக்க இந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்க மாட்டார்.

மேலும், ஜேவிபி ஆனது தேசிய மக்கள் சக்தியாக மாறியது. சிவப்பு இளஞ்சிவப்பாகியது. சின்னமாக இருந்த மணியை திசைகாட்டியாக்கி, மக்கள் செல்வாக்குள்ள நபர்களை மக்கள் மத்தியில் இறக்கி ஒரு அரசியல் பிரச்சாரத்தினை முன்னெடுத்து சென்றனர். அது எங்கள் பக்கத்தில் இருக்கவில்லை. எம்முடன் இருந்த சிலரை மக்களுக்கு பிடிக்கவில்லை அதுவும் உண்மை, அவர்களை மக்கள் விமர்சித்தனர்..”

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதே தமது குழுவின் திட்டமாகும் என அவர் இங்கு தெரிவித்தார்.

நேற்றிரவு ஒளிபரப்பான நெத் எப்எம் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷத சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசியப் பட்டியல் இல்லாமல் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில்...

லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கல்

இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை...

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம் – கபீர் ஹாசிம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார்...