follow the truth

follow the truth

October, 2, 2024
Homeவிளையாட்டுடெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கடந்த 27ம் திகதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் நேற்று (01) நடந்தது. இதில் 95 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறியது.

இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 179 வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வியுடன் டிம் சவுதியின் முடிவு

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள...

தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார். X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள...

வெளிநாட்டு பயிற்சியாளர்களை அழைத்து வந்ததற்கான காரணத்தினை விளக்கினார் சனத்

தான் விரும்பும் வீரர்களை பாரபட்சமாக பார்க்கும் கலை தன்னிடம் இல்லை என்றும் அனைத்து வீரர்களையும் ஒன்றாக கருதுவதாகவும் இலங்கை...