follow the truth

follow the truth

December, 30, 2024
HomeTOP1"LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்" நாமலின் ஊடகப் பிரிவு

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரித் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் அடிப்படையற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் ஷரோன் சமரநாயக்க ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நடத்தப்பட்ட முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) வாகனம் பயன்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் லங்கா மின்சார தனியார் நிறுவனம் (LECO) நடத்திய ஆரம்பக்கட்ட உள்ளக விசாரணையில், இந்த குற்றச்சாட்டு அரசியல் போட்டியின் அடிப்படையிலான பொய்யான குற்றச்சாட்டு என இது தொடர்பிலான எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்க நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக ஷரோன் சமரநாயக்க ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதுவரை கொழும்பு 10, டி.ஆர்....

சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பிலான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல...

நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி 

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால்...