இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் ஒரு பரந்த மோதல் பற்றிய அச்சத்தை தூண்டுகிறது.
சர்வதேச எண்ணெய் விலையின் முக்கிய அளவுகோலாக இருக்கும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 1% அதிகரித்து $74.40 ஆக உள்ளது.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஈரான் உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், OPEC எண்ணெய் உற்பத்தியாளர்களில் மூன்றாவது பெரிய உறுப்பினராகவும் உள்ளது.
இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரான் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் குறிப்பிட்டுள்ளன
பிராந்தியத்தில் ஏதேனும் இராணுவ அதிகரிப்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை பாதிக்கலாம் என்று வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.
ஓமான் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் பாதை, உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமானது மற்றும் உலகின் விநியோகத்தில் 20% பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற OPEC உறுப்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் ஆகியவையும் இந்த ஜலசந்தி வழியாக தங்கள் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை கொண்டு செல்கின்றன.