தற்போது உள்ள மாற்றீடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி மாத்திரமே இருப்பதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ளும் பணியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு என அவர் கூறுகிறார்.
மஹரகம பிரதேசத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போது சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“.. ஒவ்வொரு தரப்புக்கும் வாக்களித்த பலரும் தற்போது அனாதைகளாக உள்ளனர். இன்றைய அரசாங்கத்திற்கு ஒரே மாற்று ஐக்கிய மக்கள் கூட்டணியும் ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே.
இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கேள்விகள் மற்றும் சவால்களுக்கு பதில் வழங்கும் குழுவாக நாம் மாற வேண்டும். இந்த நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தில் முன்னோடி வேலைத்திட்டமும் பொறுப்பும் எமக்கு இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். இப்போது மொத்த உள்ளூர் வருமானத்தில் 6% கல்விக்கு ஒதுக்குவது கடினம் என்று கேள்விப்படுகிறோம்.
இந்த நாட்டில் கல்விக்கான அதிக வளங்களைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தையும் நாம் ஆரம்பிக்க வேண்டும். இதுதான் புதிய அரசியல் கலாச்சாரம். ஒவ்வொரு நாளும் விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணத்தை நாம் தொடங்க முடியாது.
இப்போது நாம் கேள்விப்படும் பல விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன, பல விஷயங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு அந்த குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்க வேண்டும்..” என்றார்.