ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காகவே இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகிறது.
வரவு செலவுத் திட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.