follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP2லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

Published on

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

அதுவே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திடீரென லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக லெபனானில் உள்ள பல இடங்களில் குண்டு மழை பொழிந்தது. ஏற்கனவே இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதை இரு தரப்பும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

அடுத்த கட்டமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தரை வழி தாக்குதலை மேற்கொள்ள இருக்கிறது. இதை இஸ்ரேல் தரப்பே தங்களிடம் தெரிவித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி வந்த நிலையில், தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்குவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில்,

“… எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்ட தாக்குதலை நடத்துவதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். அவை சிறியளவிலான தரை வழி தாக்குதலாக இருக்கும் என்பதே எங்கள் புரிதல்” என்றார்.

லெபனான் எல்லையில் இஸ்ரேல் வீரர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போதைய கள சூழலை வைத்துப் பார்க்கும் போது தரைவழி தாக்குதல் உடனடியாக தொடங்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக ஹிஸ்புல்லா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இப்போது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்க உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜப்பான் பிரதமராகிறார்

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) அந்நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முன்பு தேர்வு...

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக தங்களின்...

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரிக்கை

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தி அதன் உண்மைத்தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...