மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.