follow the truth

follow the truth

September, 30, 2024
HomeTOP2அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னத்தில் உருவாகும் புதிய கூட்டணி போட்டியிட வேண்டும் என்பதும் அதில் ஒரு நிபந்தனை.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றைய நிபந்தனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி...

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரிக்கை

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தி அதன் உண்மைத்தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...

பாதுகாப்புடைய இடத்திற்கு மாற்றப்பட்டார் அயதுல்லா அலி கொமேனி

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி...