follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Published on

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகளவில் மின்னல் ஏற்படுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...