களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம மது 74வது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமார வெல்கம கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.