பாதுகாப்பு, போக்குவரத்து, தாய்மை, சமத்துவம் மற்றும் செல்வம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஆய்வொன்றின் தரவரிசைப்பட்டியலில் உலகளவில் கனடாவின் ரொரன்றோ முதலிடம் பிடித்துள்ளது.
Bloomberg என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயங்களை உள்ளடக்கிய, பணி செய்யும் பெண்களின் வாழ்க்கைத்தரத்தில் ரொரன்றோ நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
15 நாடுகளிலுள்ள 3,000இற்கும் அதிகமான 18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையிலுள்ள பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றார்கள்.
இந்த ஆய்வில், ரொரன்றோ முதலிடத்தைப் பிடித்தது. அது, சமத்துவம், தாய்மை தொடர்பான விடயங்கள், செல்வம் ஆகிய இடங்களில் நல்ல புள்ளிகளைப் பெற்றது. ஆனால், போக்குவரத்திலோ, மோசமான இடத்தைப் பிடித்தது.
ரொரன்றோவைத் தொடர்ந்து, சிட்னி, சிங்கப்பூர், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.