கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.