follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Published on

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை முழுமையாக செலுத்தத் தவறியதன் காரணமாக இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டோபர் 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நிலந்த ஜயவர்தனவுக்கு நோட்டீஸ் அனுப்ப பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தலில் இருந்து பின்வாங்கிய விக்கி

இளையோருக்கு இடமளித்து இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினை...

பொதுத்தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...