follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

Published on

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதற்கான விருப்பத்தை இது வரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே, முன்னாள் ஜனாதிபதியின் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் ஆசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தலிலோ அல்லது தேசியப்பட்டியலிலோ போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு போட்டியிடமாட்டேன் என தான் நினைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன அண்மையை ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தலில் இருந்து பின்வாங்கிய விக்கி

இளையோருக்கு இடமளித்து இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினை...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின்...