follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1"அன்று ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் 'கார் ஷோ' நடத்தியமை ஞாபாகத்திற்கு வருகிறது"

“அன்று ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் ‘கார் ஷோ’ நடத்தியமை ஞாபாகத்திற்கு வருகிறது”

Published on

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச் செல்ல இந்த அரசு தயாராவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி ஆடம்பர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை நேற்று (26) முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வாகனங்களை காட்டுவதன் மூலம் அவர்கள் ஒரு சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். 2015ம் ஆண்டு ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் கார் ஷோ நடத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாகனங்களை அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயன்படுத்தவில்லை. இந்த வாகனங்களை பொதுப்பணித்துறையினர் மற்றும் அரச அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வாகனங்களை ஏலமிட்டு பணத்தை திறைசேரிக்கு எடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இந்த வாகனங்களை ஏலமிட்டு அரச அதிகாரிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின்...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...