தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மற்றுமொரு ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்புக்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்துள்ளார் என பல ஊடகங்கள் இன்று (26) காலை செய்தி வெளியிட்டிருந்தன.
நாமும் இந்த செய்தியினை வெளியிட்டிருந்த நிலையில், இந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லிங்கிடம் வினவியிருந்தோம்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தத் தயார் என்று கூறியதில் உண்மையில்லை என்ன என்று அவர் தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் அப்படிச் சொல்லவில்லை என்று கூறினார்.
புதிதாக பதவியேற்ற அரசால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய வேலைத்திட்டத்தின் போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக மாத்திரம் தெரிவித்தார்.
இருப்பினும், ஜோசப் ஸ்டார்லிங் தெரிவிக்கையில் தற்போது அவசர வேலைநிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்றும் கூறினார்.
இணைப்புச் செய்தி