ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிக் கிண்ணத்தின் கீழ் போட்டியிடுவதற்கு உரிய கூட்டணி தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும், அதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் கீழ் “கதிரை” சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் இன்று இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த குழுவின் விசேட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.