நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்குள் தற்போதுள்ள கடவுச்சீட்டு வரிசையை முடித்துவிட்டு புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.