ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நீண்ட நாட்களாக அவரைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் தலைவர் இரகசியமாக பதுங்கி தனது அடுத்த கட்ட இரகசிய காய்நகர்த்தல்களை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் யஹ்யா சின்வார் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் நேருக்கு முரணான கருத்துக்களை பரப்பினாலும் அதை உறுதி செய்ய உறுதியான ஆதாரம் இல்லை.