follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுதேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

Published on

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுவாகச் சொன்னால், சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக உள்ளது, தேங்காய் எண்ணெய் விலை கூட உயர்ந்துள்ளது.

400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 560 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தேங்காய், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பால் அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு கட்டுப்பாடான விலையில் உணவு வழங்கும் வியாபாரிகள் உணவு தயாரிப்பதில் பெரும் செலவுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது குறித்து அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனாவிடம் வினவியபோது;

தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு தேங்காய் கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தேங்காய் விலை குறையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...

வடக்கு ரயில் சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...