பின்தங்கிய பிரதேசங்களுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் நான்கு வருடங்கள் அந்த வைத்தியசாலைகளில் பணியாற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரச் சேவைகளை மேலும் வினைத்திறன் மற்றும் நெறிப்படுத்தும் நோக்கில் 1,000 மருத்துவக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளாா்.
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.