follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

Published on

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அந்த பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தொடர்பான காவல்துறை பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நாளை (20) நாளை மறுதினம்(21) விசேட தொலை தூர பேருந்து சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கசந்துறைக்கும் இடையில் இன்று விசேட புகையிரதத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளை மறுதினம் 21ம் திகதியும் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையிலும், நாளை மற்றும் 22ம் திகதிகளில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு வரையிலும் இந்த ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அநுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான வீதியின் பழுதடைந்த நிலை காரணமாக புகையிரதம் இயங்காது என புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சந்தன லால் கூறுகையில், சம்பந்தப்பட்ட பாதையில் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்த போதிலும், சமிஞ்சை கோளாறுகள் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% ஆக அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம்...

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கின் மீனவப் பிரச்சினை...

வெலே சுதா உட்பட மூவருக்கு கடூழிய சிறை

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும்...