follow the truth

follow the truth

September, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

Published on

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாங்கள் அரசியல் ரீதியாகவும் எண்ணக்கரு ரீதியாகவும் வெவ்வேறு முகாம்களில் இருந்தவர்கள். மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதும் “மகிந்த சுலங்க” வுடன் நாடு முழுவதும் சென்று ஆட்சி அமைக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்த போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது, “மொட்டு” கட்சியை உருவாக்கினோம். மொட்டுக் கட்சி, கிராம மட்டத்தில் ஏற்பாடுகளை செய்யும் போது உங்களின் மாவட்டத் தலைவர் தான் அத்திட்டத்தை உருவாக்கி, மற்றும் அதனை கிராமத்திற்கு எடுத்துச் சென்று இந்த நாட்டில் வலுவான அரசியல் கட்சியை உருவாக்க பாடுபட்டார்.

நாங்கள் ஒரு கட்சியை உருவாக்கினோம், ஒரு அரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதிகளை நியமித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எங்களால் நிர்வகிக்க முடியவில்லை. எங்களிடம் 156 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

69 இலட்சம் வாக்குகளை ஜனாதிபதிக்கு வழங்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியைப் பெற்றார். அப்போது எமது அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். அப்போது எமது அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார். பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சர். அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஐந்து அமைச்சுகளை கொண்ட அமைச்சரவையில் இருந்தார்.

மொத்த அமைச்சரவையில் ராஜபக்ஷாக்கள் ஆறில் ஒரு பங்கினர். நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து, பல்வேறு பிரச்சினைகள் வந்தபோது, அமைச்சரவையில் பேசினோம். அப்போது அந்நியச் செலாவணி குறைகின்றது. IMF க்கு செல்லலாம் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கிறது. வேண்டாம் என்கிறது ஒரு குழு.

அன்று “வியத்மக” குழு வந்து, சர்வதேச நாணய நிதியத்திற்குப் போக வேண்டாம் என்றது. போனால் நிவாரணங்களை கொடுக்க முடியாது. “நாட்டை வழிநடத்த முடியாது” என்று ஒரு அச்சமூட்டினர். ஆனால் கடைசியில் நாங்கள் சொன்னதை அவர்கள் கேட்காததால் எங்கள் எம்பிக்கள் குழு 123 ஆக குறைந்தது. மற்ற அனைவரும் எதிர்க்கட்சியில் சுயேட்சையாக சென்று அமர்ந்தனர். நாங்கள் மிகவும் கடினத்துடன் இருந்தோம். ஆனால் படிப்படியாக நிலைமை ஆபத்தானதாக மாறியது. போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை விட்டு வெளியேறினார்.

இந்த நாட்டை நிபந்தனையின்றி யார் பொறுப்பேற்றாலும் நாங்கள் ஆதரிப்போம் என்றோம். சஜித் பிரேமதாசவுக்கு நாட்டைபொறுப்பேற்க உதவுவோம் என்று கூறினோம். பத்து வருடமானாலும் இந்த நாட்டை மீட்க முடியாது, இது பெரும் தீ.. இதை ஏற்றுக்கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள முடியாது என்றார். அனுரகுமார திஸாநாயக்க அப்போது சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருந்தவர்.

அவரும் தோல்வியடைந்த அமைச்சரே. அவரும் இந்த நாட்டை ஏற்க மறுத்துவிட்டார். ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை “ஒப்படைப்போம்” என்று சொன்னோம். அவர் ஒரு தனி நபர். மக்கள் படும் துன்பங்களுக்கு தீர்வைத் தரச் சொன்னோம். அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று முதலில் செய்த காரியம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுதான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியது மட்டுமன்றி, இந்நாட்டின் வன்முறைச் சூழலில் இருந்து நாட்டை விடுவிக்கவும் பாடுபட்டார். இல்லாவிட்டால் இன்று இந்த நாடும் பங்களாதேஷாக மாறி இருக்கும்.

பத்து வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார். வங்குரோத்தான நாட்டிற்கு யாரும் உதவவோ, கடன் கொடுக்கவோ வருவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்த சர்வதேச உறவுகளின் மூலம் நாடு நாடாக சென்று அரச தலைவர்களை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடிந்தது. அப்போது நாட்டைப் பொறுப்பேற்க இல்லை. ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியதன் பின்னர் இன்று 38 வேட்பாளர்கள் ஆட்சியை பிடிக்க வந்துள்ளனர்.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 104 பேர் இன்று எம்முடன் இணைந்துள்ளனர். 21 ஆம் திகதி வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று பேஸ் சிலிண்டருக்கு புள்ளடி இட்டு எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டை மீண்டும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு உங்கள் அனைவரியதும் ஆதரிவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பிணைமுறிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் வங்குரோத்துநிலை...