கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவளிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் நமீபியாவில் 83 யானைகளை கொல்வதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைச்சியை வழங்குவதற்கும் எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்றுகிறது.
ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட தென்னாப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மொத்த யானைகளில் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான யானைகள் தென்னாப்பிரிக்க பகுதிகளில் தான் வாழ்கின்றன.