சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
அப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளதாகவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10,000 இற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே புயல் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியதுடன் இதனால் சுமார் 100 விமானங்கள் அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்வரை மேலும் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.