follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2"ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது"

“ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது”

Published on

இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியதாவது;

“.. தேர்தலின் வெற்றி அலை, தேர்தல் பிரச்சாரத்தின் முடிவிலேயே தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்கூட்டடித் தயாராகிய அனைவரும் தோற்றனர். கடைசி நிமிடத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்றைய நிலையில், மொனராகலை மட்டுமன்றி முழு இலங்கையினதும் ஆதரவைப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

அத்துடன், இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 பேரில் யார் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். யாராலும் முடியாது என்று சொன்னதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘இயலும்’ என்று செய்து காட்டிவிட்டே உங்கள் முன்வந்துள்ளார். குழுவாக, நாங்கள் அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். ஏனெனில் அவருக்கு ‘இயலும்’ என்று எங்களுக்குத் தெரியும்.

நான் விவசாய அமைச்சராக அமைச்சுப் பொறுப்பை ஏற்றபோது விவசாயிகளுக்கு உரம் இல்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை ஏற்று விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு செய்தார். அதனால், இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நெல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி மற்ற விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயத்தில் இருந்து கடந்து, நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 – 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது. சவால்களை ஏற்றுக்கொண்டால், அந்த சவாலை நாம் வெல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கிறோம். இன்று நாடு அழிந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். இந்த அழிவுக்கு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோரும் உடந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யே அப்போது இந்த நாட்டை வங்குரோத்தாக்கியது. அன்று சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்துள்ளனர்.

குறைந்த பட்சம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவும் அவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அன்றி, இந்த நாட்டை வெற்றிபெறச் செய்யவே, கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...