ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்ததாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், நாளை (18) முதல் தேர்தல் நாள் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ராஜித ரணசிங்க தெரிவித்தார்.