பொதுவாக ஒரு நாட்டில் இருந்து போட்டியாளர் ஒருவரை சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கு தெரிவு செய்து அனுப்புவதாக இருந்தால் எங்களுடைய நாட்டின் பொதுவான ஒரு முறை தான் இலங்கையில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் அது சம்பந்தமான அறிவித்தல் கொடுக்கப்பட்டு மாணவர்கள் தயார் செய்யப்பட்டு ,போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறக்கூடிய அந்த மாணவன் சர்வதேச ரீதியாக நடைபெறும் போட்டிக்காக அனுப்பப்படுவார், இது தான் காலாகாலம் நடைமுறையில் உள்ள வழக்கம். … முஸ்லிம் CULTURAL AFFAIRS முன்னின்று இதை செய்யும்.
ஆனால் விசித்திரமாக, அநியாயமாக இம்முறை ஒரு விடயம் நடைபெற்றுள்ளது .
குவைத் நாட்டில் செப்டெம்பர் மாதம் சர்வதேச ரீதியான குர்ஆன் போட்டி நடைபெற உள்ளது.
அந்த நாட்டின் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒருவரை தெரிவு செய்து அனுப்பும்படி ஒரு மதரஸாவுக்கு கடிதம் வந்திருக்கிறது (அனுமதி கேட்டு பல கடிதங்கள் அனுப்பியதற்காக) அந்த மதரஸாவின் அதிபர் அவர்களிடம் ஓதக்கூடி மாணவனை அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இது தொடர்பில் பல உலமாக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் இலங்கையில் உள்ள அனைத்து ஹாபிழ்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு நீதமான தெரிவு இடம்பெற வேண்டும் என்பது எல்லோருடையவும் அவா ஆகும்