follow the truth

follow the truth

December, 21, 2024
HomeTOP1கட்டுநாயக்கவில் இரண்டு கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

கட்டுநாயக்கவில் இரண்டு கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

Published on

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொழும்பு – 13 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120,400 சிகரெட்டுகள் அடங்கிய 602 அட்டைப்பெட்டி சிகரெட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மருதானை பொலிஸாரினால் இன்று (21) கைது...

‘கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் CID வாக்குமூலம்

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட...

ஹட்டன் பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. பஸ் வீதியை விட்டு...