சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர, வாக்குறுதிப் பத்திரத்தை முன்வைக்கவில்லை மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்துள்ளதாகக் கூறுகிறார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட தொழில்முனைவோர் திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.
“..இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல. இலங்கை அரசியலில்.. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இதுபோன்ற மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். நீங்கள் நம்பும் இலங்கையை எப்படி உருவாக்குவது என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. எனவே, எமக்குக் கிடைத்துள்ள இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் நானும் எமது கனவில் கண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவோம். அதற்கு நீங்கள் திருத்தி கொள்ள வேண்டிய இலங்கை அரசியலையே..”