அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வருகிறது.
எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது.
யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்கு அவர் தற்போது சென்றாரா? என்பது உறுதியாகவில்லை. என்றபோதிலும் வடகொரிய அணு ஆயுதங்களை அதிக அளவில் பெருக்குவதில் உறுதியாக உள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
2006-ம் ஆண்டு முதன்முறையாக வடகொரிய அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்கு தடைவிதித்தது.
அதன்பின் முதன்முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது.