வியட்நாமில் யாகி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் ௦எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க மதிப்பீடுகளின்படி, அந்நாட்டின் மிகப்பெரிய நதிகளில் ஒன்று 20 ஆண்டுகளில் முதன்முறையாக அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதனால் வியட்நாம் தலைநகர் ஹனோய் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இன்று(11) வியட்நாமின் சிவப்பு நதி பெருக்கெடுத்ததில் ஹனோயின் சில பகுதிகளில் வெள்ள நீர் ஒரு மீட்டர் உயரம் வரை எட்டியது. இதனால் மக்கள் வெளியில் செல்லப் படகுகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
வடக்கு வியட்நாம் முழுவதும் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்தான் இறப்புகளுக்கு முக்கியக் காரணம் என்று வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் ஆசியாவை தாக்கிய பலம் வாய்ந்த சூறாவளியாக Yagi பதிவாகியுள்ளது.