இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்கள் இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன என்ற கவலைகளுக்கு மத்தியில் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
தடையை அமல்படுத்துவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, எதிர்வரும் மாதங்களில் வயது சரிபார்ப்பு சோதனையை அரசாங்கம் தொடங்கும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
Facebook, Instagram மற்றும் TikTok போன்ற தளங்களில் உள்நுழைவதற்கான குழந்தைகளுக்கான குறைந்தபட்ச வயது முடிவு இன்னும் செய்யப்படவில்லை, ஆனால் 14 முதல் 16 வயது வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அல்பானீஸ் கூறினார்.
குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வைப்பதற்கான கூட்டாட்சி சட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.