மாணவர்கள் வினாத்தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சரியான விடைகள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் AI தொழில்நுட்ப இயந்திரத்திற்கு அனுப்பப்படும்.
செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும்.
AI தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
வினாத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கு ஒரு AI தொழில்நுட்ப கருவி வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் விடைத்தாளில் உள்ள பிழைகளை கண்டறிந்து சரியான மதிப்பெண் தர முடியும். இதற்கென பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள் AI தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்த தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.