தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.
பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இதனால் கரையோர ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோர ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாக அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.