இந்த நாட்டின் தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இரண்டாவது விருப்பு வாக்கு என்பது இல்லை. முதல் சுற்றிலேயே ஐக்கிய மக்கள் சக்தி செல்வது உறுதி. அந்த அரசியல் வியாபாரிகளின் கேவலமான ஒப்பந்தங்களுக்கு இந்த நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களால் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்க முடியவில்லையா என்று நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன். அநுரவுடனான போலி ஒப்பந்தத்திற்கு பதிலாக கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை ஒன்றினை எடுங்கள். நான் உறுதியளிக்கின்றேன் 21 வெற்றியின் மூலம் கடவுச்சீட்டு வரிசைக்கான காரணத்தினை மக்களுக்கு வெளிப்படுத்துவேன்..”