follow the truth

follow the truth

October, 6, 2024
HomeTOP1தரம் 5 புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

தரம் 5 புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

Published on

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...

அநுராதபுரம் முதல் மஹவ ரயில் சேவையை முன்னெடுப்பதில் தாமதம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே...

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும்  அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம்...