follow the truth

follow the truth

April, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம்

வீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம்

Published on

தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிக்கான உரிமை இருக்கின்றது. இளைஞர் சமூகத்திற்காக பயிரிடப்படாத காணிகளை வழங்கி, அவர்களை சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக பலப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அனைத்து இடங்களிலும் வீடமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பிரச்சினை காணப்படுகின்றது. எனவே முறையான அடிப்படையில் நகரமயமாக்கல் திட்டத்திற்கு செல்வோம். நீரில்லாத பிரதேசங்களுக்கு நீர் விநியோகத் திட்டங்களை முன்னெடுப்போம். நீர் மக்களின் மனித உரிமைகளில் ஒன்று என்பதால் அதனை நாம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 41 ஆவது மக்கள் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 09 திகதி கண்டியில் மிக முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம். இந்த அரசாங்கமும், தற்போதைய பதில் ஜனாதிபதியின் ஆட்சியிலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட அக்கறையற்ற தீர்மானங்களால் வறுமை அதிகரித்து காணப்படுகின்றது. ஏழைகள் தொடர்ந்தும் நிவாரணங்களை எதிர்பார்ப்பதில்லை.

எனவே கெமிதிரிய, அஸ்வெசும, ஜனசவிய, சமுர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி, வறுமையை ஒழிக்கின்ற வேலைத் திட்டத்தை முன்னெடுத்து, 24 மாதங்களுக்கு மாதாந்தம் 20 000 ரூபா வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் தலதா மாளிகையில் பிக்குகளுக்கே வழங்கினோம். வங்குரோத்தடைந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்புகின்ற பயணத்திற்கு பிக்குகளோடு, மக்களையும் சேர்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்திருக்கிறது. எமது நாடு பல அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளது.

இன, மத, குல, வகுப்பு, கட்சி வேதங்கள் இன்றி இந்த அனர்த்தங்களை எதிர்கொண்டு அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்களை தவிர 220 இலட்சம் மக்கள சகித்துக் கொள்ள முடியாத அளவில் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்த துன்பத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பது தமது பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...

“இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...