follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP2ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும் – ஜனாதிபதி

Published on

லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஹப்புத்தளையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இந்த பிரதேசங்கள் பற்றி நான் 75 வருடங்கள் அறிவேன். இன்று குறைப்பாடுகள் இல்லாத அப்புத்தலை தேர்தல் தொகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2022 ஆம் ஆண்டில் இராணுவ நிகழ்ச்சி ஒன்றுக்காக இங்கு பிரதமராக வந்தபோது அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் நீண்டு கிடந்தன. தொழில் இன்றி மக்கள் அல்லல் பட்டனர். வீடுகளில் முடங்கினோம். எதிர்காலம் கேள்விக்குறியாக தெரிந்தது. இவற்றை நிவர்த்திக்க மக்களுக்காக அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டேன்.

அதன் பின்னர் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.. அவர்களின் நிபந்தனைகளுக்கு அமைய எவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் முன்கூட்டியே அறிந்திருந்தேன். அவர்கள் மேலும் இலங்கைக்கு கடன் தரவும் தயாராக இருக்கவில்லை.

கடன்பெறவோ, பணம் அச்சிடவோ முடியாது என்று வலியுறுத்தினர். கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டிருந்தனர். அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை. இறுதியாக வேறு வழியின்றி வரியை அதிகரிக்கும் கடினமாக முடிவை எடுத்தோம். வருமான வரியையும் அதிகரித்தோம். ரூபாவின் பெறுமதி இரட்டிப்பாக அதிகரித்தது. ஆனால் பணம் கிடைக்கவில்லை.

அதற்கு மத்தியிலேயே கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதன் பயனாக நாட்டின் வருமானம் அதிகரித்தது.. டொலரின் பெறுமதி குறைந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைந்தன. ஆனால் மக்கள் கஷ்டம் முற்றாக குறையவில்லை. ஆனால் எமது வருமானம் அதிகரிக்கிறது. 2023 ஓரளவு மக்களிடம் பணம் இருந்தது.

அதனை யாருக்கு பகிரலாம் என்று சிந்தித்தேன். அதன்படியே குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு ‘அஸ்வெசும’ வழங்கும் திட்டத்தை செயற்படுத்தினோம். லயன் அறைகளில் வசிக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும். எனவே, இவ்வருடத்தில் மேலும் வருமானம் அதிகரிக்கும். தோட்ட தொழிலாளர் சம்பளமும் அதிகரிக்கும்.

அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கும். அடுத்த வருடம் மேலும் அதிகரிக்கும். ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குவோம்.

நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இப்போது வௌிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியும். ஐஎம்எப் இடமிருந்து நிவாரணங்கள் கிடைக்கின்றன. கடன் வழங்கிய நாடுகள் மீள் செலுத்த சலுகைக் காலத்தை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றி முன்னோக்கி சென்றால் எமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.

எனவே, எனது எதிர்காலத்தை விடுத்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானியுங்கள். அனுரவும் சஜித்தும் இவற்றை மாற்றுவதாக கூறுகிறார்கள். அதனால் நெருக்கடிகள் மீண்டும் தலையெடுக்கும்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதே இப்போதைய தேவையாகும்.. அதனால் தன்நிறைவான வருமானத்தை ஈட்ட வேண்டும். பழைய முறைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக தோட்ட தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறோம். லயன் அறை முறைகளை முற்றாக ஒழித்துவிட்டு கிராமங்களாக மாற்றியமைப்போம். காணி உறுதிகளையும் மக்களுக்கு தருகிறோம். விரும்பியவாறு வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும். அதனால் தோட்டங்கள் கிராமங்களாக பரிணமிக்கும்.

மரக்கறி மற்றும் பழ உற்பத்திக்கும் தேவையான வசதிகளை மேம்படுத்தி தருவோம். அதனால் உள்நாட்டு, ஏற்றுமதி உற்பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். சுற்றுலாத்துறையையும் இங்கு பலப்படுத்த வேண்டும். அதனால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம். டிஜிட்டல் யுகத்தை உருவாக்குவோம். பெண்களையும் கைவிடவில்லை. அதற்குரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பெண்கள் சிறுவர் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவோம். பெண்களை தொழில் சந்தைக்குள் உள்வாங்குவோம். சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை அமைத்து தருவோம்.

இவற்றுக்காகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறேன். ஹப்புதல மற்றும் தியதலாவ போன்ற நகரங்களின் அபிவிருத்திக்கு வழி செய்வேன். எனவே சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது கிராமங்களும் இருக்காது.” என்றார்..

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு...

பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு

கடந்த 18 ஆம் திகதி பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய...

12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாளை...